Genesis
of Carnatic music is Tamil music
கருநாடக இசை தமிழிசையே!
இசையானது எல்லா மனிதர்களின் வாழ்க்கையோடும் ஏதோவொரு வகையில் தொடர்புடையதாகும்.
நம் தமிழ் மொழியானது
இயற்றமிழ்,
இசைத்தமிழ், நாடகத்தமிழ்
என மூன்று வகையினதாய் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழ் மொழி என்பது மொழியாக மட்டுமன்றி இசைக்குமாக வழங்கப்பெறும் அளவிற்கு இசைத்தமிழ் தனித்தன்மையுடையது.
தமிழ் மொழியினைப்
போல
தமிழிசை என்பதும்
மிகப்
பழமையானதாகும்.
தமிழிசையானது
மெல்லிசையாகவோ
நாடக இசையாகவோ
நாட்டுப்புற இசையாகவோ
செவ்விசையாகவோ
வேத்தியல் இசையாகவோ
பக்தியிசையாகவோ
இருக்கலாம். செவ்விசை
என்பது
கருநாடகயிசையைக் குறிப்பதாகும்.
வேத்தியல் இசை பொதுவியல் இசை என இருப் பிரிவு உண்டு. அதில்
வேத்தியல் இசை (court
music) என்பது
அரசவை
இசை
என்னும்
செவ்விசையான
கருநாடகயிசையாகும்.
இன்றைக்குக்
கிடைக்கின்ற
பல்வேறு ஆதாரங்களை
நோக்குங்கால்,
இன்று
செழித்தோங்கி
இருக்கும்
கருநாடக
இசையின்
வேர்களானது
தமிழிசையாகவே வளர்ந்திருக்க
வேண்டும்
அல்லது
தமிழிசையிலிருந்து
தோன்றியிருக்க
வேண்டும்.
இரண்டு
இசை
மரபுகளையும்
ஒப்பு
நோக்குங்கால்
இன்றைய
கருநாடக
இசையில்
பயன்படும்
இசை
வழக்குகள்,
இசை
அமைதிகள் முந்தைய
பழந்தமிழ்
இசையின்
வழக்குகளுக்கு
புதிதாகப்
பெயரிட்டும்
அதிக
பயன்பாட்டினால்
வளர்ச்சி
அடைந்தும்
கால
மாறுபாட்டிற்கேற்ப
உருமாற்றமடைந்தும்
இருக்கின்றன என்பதின் சாத்தியக் கூறுகள்
காணலாகின்றன. மேலும் “கருநாடக இசை தமிழிசையே” என்பதனை
உறுதிப்படுத்த ஆராயும் முகமாக பின்வருவன
அமைகின்றன.
கருநாடக
இசை
“கருநாடக இசை” என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாரம்பரிய இசையாகும்.
அதாவது சமீபத்திய இந்திய வரலாற்று குறிப்பு புத்தகங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியின்
முன் தென் இந்தியாவில் அரசாட்சி என்பது: திருவிதாங்கூர் - இன்றைய கேரளா,
மைசூர்- மேற்கு கடற்கரை பகுதியை தவிர்த்து இன்றைய கருநாடகத்தின் தெற்கு பகுதி,
மற்றும் கருநாடகம் – (1950 இல் தென் இந்தியாவின் மதராஸ் மாநிலத்தின் சிலப் பகுதிகள்
அதாவது இன்றைய தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா மற்றும் சில அண்டை பகுதிகள்). கருநாடகப்
பேரரசு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போது, அதற்கு மதராஸ் மாகாணம் என அழைத்தனர்.
பின்பு சென்னை பட்டணம் என அழைக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பெரும்பாலும்
‘தமிழகம்’ என்றும் ‘கருநாடகம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனை கரு+நாடு+அகம் எனப் பிரிக்கலாம். ‘கரு’ என்றால் ‘கருமையான மக்கள்’ என்றும் ‘மத்தியம்’ எனவும் பொருள்படும். ‘கரு
நாடு’ என்பது பழமையான நகரம் என்ற அர்தத்தையும், அகம் என்பது ‘வீடு’ மற்றும் ‘தன் அகத்தே’ எனவும் பொருள்படும். ‘கரு
நாடு அகம்’ என்பது ஆங்கிலேயர்களால் கருநாடகம் என அழைக்கலாயிற்று. அதன் பிறகும் பிரிட்டிஷ் மக்களால் மெட்ராஸ் என பெயர் மாற்றம்
செய்யப்பட்டது..எனவே கருநாடக நாட்டின் இசை ‘கருநாடக இசை’ என பெயராயிற்று”.
ஏழு சுரங்கள்
பழந்தமிழ் மக்கள் முதலில் ஏழு சுரங்களை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இசைத்தனர். ஸட்ஜம்,
ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் எனும் ஏழ் சுவரங்களுக்கும்
பழந்தமிழில் குரல் (ச), துத்தம் (ரி), கைக்கிளை (க) உழை (ம), இளி (ப), விளரி (த), தாரம் (நி) என்ற ஏழ் பெயர்கள் வழங்கின.
குடமுதல் இடமுறையாக் குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரம் என
விரி தரு பூங்குழல் வேண்டிய பெயரே – சிலப். 17: 13-8, 9, 10
இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பண்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் குறிப்பிடுவது: “பூர்வ தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய
பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி
வருகின்றன. தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள்
பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி
வந்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்கத் தலைப்பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம்
சொல்ல இங்கு அவசியம்
இல்லை. இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு
போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு
போயிருக்க வேண்டும் என்பது
பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”.
இன்றைய கருநாடக இசையில்
கையாளப்பட்டு
வரும் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய கீர்த்தனை வடிவத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முத்துத்தாண்டவரே.
பண்
பண் என்பதனை இக்காலத்தில் இராகம் என்றழைக்கின்றோம். இசையானது பல்வேறு இராகங்களின் அடிப்படையில் அமைகிறது. பாவோடு நிறத்தினை(இராகத்தினை) இசைத்தலால் இசையெனப்பட்டது. யாழினின்று பண் பிறந்ததால் பண் என்பது
யாழ் எனவும் பெயர் பெற்றது. குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஆரோசையிலும், தாரம், விளரி,
இளி, உழை, கைக்கிளை, துத்தம், குரல் என அமரோசையிலும் ஏழு இசையும்
அமைந்தால் அது “பண்” எனப்படும் .கருநாடக இசையின்
ஆரோகணம் அவரோகணம் என்பது
தான் ஆரோசை அமரோசை
ஆகும். இவ்வாறு ஆரோகண அவரோகணத்தில் ஏழு சுரங்களும் முறையே அமைந்தால் கருநாடக
இசையில் இது “சம்பூர்ண இராகம்” எனப்படும். ஏழிசையில் ஆறு இசை கொண்டவை
“பண்ணியல்” எனப்படும். (கருநாடக இசையில் இது “ஷாடவ இராகம்” எனப்படும்). ஏழிசையில் ஐந்திசை
கொண்டது “திறம்” எனப்படும்.(கருநாடக இசையில் இது “ஒளடவ” இராகம் எனப்படும்).ஏழிசைகளையும் பழந்தமிழர் இவ்வாறு
வகுத்துக் கொண்டனர். பின் அவற்றைப் பின்வருமாறு பகுத்துக் கொண்டனர்.
பண் வகைகள் – (சம்பூர்ண இராகம்) – 17
பண்ணியல்கள் – (ஷாடவ இராகம்) – 70
திறங்கள் – (ஒளடவ இராகம்) – 12
திறத்திறங்கள் – (சுராந்தரம்) – 04
மொத்தம் – 103
பண்ணியல்கள் – (ஷாடவ இராகம்) – 70
திறங்கள் – (ஒளடவ இராகம்) – 12
திறத்திறங்கள் – (சுராந்தரம்) – 04
மொத்தம் – 103
தமிழர் இசை, சுர அலகுகளினின்று உருவாக்கப்பட்ட நாற்பெரும் பண்ணையும், அவற்றினின்று பெயர்த்துக் கொள்ளப்பெற்ற ஏழ்பெரும் பாலைகளையும், பன்னிரு பாலைகளையும், அவற்றினின்று உருவான நூற்று மூன்று பண்புகளையும், கிளைப் பண்புகளையும், நரப்படைவால் (பண்ணின் சுர அடைவு) உரைக்கப்பட்ட 11,991,ஆதியிசைகளையும் கொண்டது. தற்காலத்தில் அடிப்படை இராகங்களை ஜனக இராகங்கள்(மேளகர்த்தா இராகங்கள்) என்றும், கிளைப்பண்களை ஜன்ய இராகங்கள் என்பர். இராகங்களின் எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் ஆகலாம்.
ஏழ்பெரும் பாலைகள்
பாலை என்ற சொல்லுக்குப் பகுக்கப்பெறும் பண் என்று பொருள்.
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நானிலப் பகுப்பே தமிழக இயற்கையாதலின் நான்கு நிலத்திற்கும் நான்குப் பண்கள் என தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நான்கு நிலத்திற்கும் உரிய பண்கள் முறையே செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை என்பன. இவற்றோடு செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை ஆகிய மூன்றும் சேர்ந்து ஏழ்பெரும் பாலைகள் என்ற ஏழு பண்கள் அக்காலத்தில் இருந்தன எனச் சிலப்பதிகார காப்பியத்தின் வழி அறியலாம். ஒரு பண்ணுக்குரிய சுரவீடுகளை (நரப்படைவு) மாற்றியமைப்பதால் வேறொரு பண் கிடைக்கிறது.
பண்ணுப் பெயர்த்தல் (Modal shift of tonic note)
பண்ணுப்பெயர்ப்பு முறையை முதலில் உலகினுக்குக் காட்டியது தென்னக இசையே என்பது பி. சாம்பமூர்த்தியவர்களின் கருத்து. பண்ணு பெயர்த்தல் (பதிற்று.65:14), பாலை திரிபு (சிலப்.13:109 அடியார்க்கு), பாலை பெயர்த்தல்(பரிபா 7:77), பாலைப் பண்ணுதல்(பதிற்று.57:8), குரல் குரலாக கொள்ளுதல்(சிறுபாண்.228), மாறு முதற் பண்ணுதல்(பெரிய.பு.ஆனாய.25), வடமொழியில் கிரகபேதம் என்ற பெயர்களால் கூறப்படுவதால் அதன் தொன்மையையும் வரலாற்றுண்மையையும் அறியலாம்.
தொல்காப்பியர் காலத்தில் பண்ணுப் பெயர்த்தல் இல்லை. பதிற்றுப்பத்திலேயே பண்ணுப் பெயர்த்தல் கூறப்பெறுகின்றது. ஏழ்பெரும் பாலைகளின் வளர்ச்சிக்காக பன்னிரு பாலைகளும், நூற்று மூன்று பண்களும் பெருகின என்பதனை அடியார்க்கு நல்லாரால் விளக்கப் பெறுகின்றது.
பண்ணுப் பெயர்த்தல் என்பது ஒரு பண்ணில் ஏனைய சுரங்களைக் கொண்டு புதிய பண் உருவாக்குதலாகும். பன்னிரண்டு சுரதானங்களை நிரலே நிறுத்திக்கொண்டு அடிப்படைப் பாலைக்குரிய சுரதானங்களை முதன்மைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் தொன்மைக் காலத்தில் ஏழ்பெரும் பாலைகட்கும் தலைமையாக நின்றும், ஆதி அடிப்படைப் பாலையாக விளங்கியது செம்பாலையாகும்.
தமிழிசை-வட்டப்பாலை
வட்டப்பாலை
தமிழிசைக்குச் சொந்தமானது. உலக கொடை. இதன் அடிப்படையில் தான் பண்ணுப் பெயர்த்தல் (Model shift of the tonic), குரல் திரிபு (Circle of Fifths & cycle of fourth) உருவானது.
வட்டப்பாலை
முறையை ஆராய்ந்தவர்களுள் முக்கியமானவர் ஆபிரகாம் பண்டிதர். அவர் எழுதிய 'கருணாமிர்த சாகரம்' நூலில் இதற்கான விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆதாரமாக வைத்து தமிழிசையில் பழங்காலத்திலிருந்து இந்த ஆதார சுருதிகள் ஆராயப்பட்டன என நுணுக்கமாக எழுதியுள்ளார். சாரங்க தேவ் அமைத்த ஸ்தாயிகள், இசைக்கு அடிப்படையான சுரங்கள், அவற்றின் geometric progressions அனைத்தையும் விரிவாக விவாதித்திருக்கிறார். இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ இசைத்த யாழ் கருவியில் ஆதாரமாக உள்ளதாகவும், இதனாலேயே கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானியிசைக்குத் தமிழிசையே அடிப்படை என வாதிட்டுள்ளார்.
ஆயப்பாலை,
சதுரப்பாலை, திரிகோணப்பாலை, வட்டப்பாலை என்பது ஏழு அடிப்படையான சுருதிகளை (ச-பா,ச-மா) ஆதார சுருதியாகப் பாவித்து, பண்டையத் தமிழர்
பண் இசைத்தனர்.
சுரங்களை – ஆயப்பாலை முறைபடியும் பண் மற்றும் ஜதி – வட்டப்பாலை முறைபடியும் நுட்ப சுரங்களை – திரிகோணப்பாலை மற்றும் சதுரபாலை முறையில் தமிழிசையில் நிறுவியுள்ளது ஆபிரகாம் பண்டிதர் தரும் மிக முக்கிய ஆதாரமாகும் .
வட்டப்பாலை என்பது 12 சுரத்தானங்களை(கோவைகளை) ஒரு வட்டத்தில் நிறுத்திப் பண்ணுக்குரிய ஏழு சுரங்களைத் தேர்ந்தெடுத்து பண் அமைத்தலாகும்.
எண் பாலை பண் இக்காலஇராகம் நரப்படைவு
1. செம்பாலை முல்லைப்பண்
அரிக்கம்போதி ச ரி2க2ம1ப த2நி1
2. படுமலைப்பாலை
குறிஞ்சிப்பண் நடபைரவி ச ரி2க1ம1பத1நி1
3. செவ்வழிப்பாலை நெய்தல்பண் இருமத்திமத்தோடி சரி1க1ம1ம2த1நி1
4. அரும்பாலை சுடுநிலப்பாலை சங்கராபரணம் ச ரி2 க2 ம1பத2நி2
5. கோடிப்பாலை மருதப்பண் கரகரபிரியா ச ரி2 க1 ம1பத2நி1
6. விளரிப்பாலை நெய்தல்பண் தோடி ச ரி1 க1 ம1பத1நி1
7. மேற்செம்பாலை மருதப்பண் கல்யாணி ச ரி2 க2 ம2பத2நி2
வட்டப்பாலையில் 12 சுரத்தானங்களை 12 கிரகங்களோடு ஒப்பிட்டு அதன் முறை விளக்கப்படுவதால் பண்ணுப் பெயர்த்தலை ‘கிரகபேதம்’ என்று இன்றும் அழைக்கின்றனர்.
இவ்வாறு ஒவ்வொன்றிலிருந்து ஒன்றாக வட்டப்பாலையில் பண்ணுப்பெயர்த்து ஏழு பாலைகள் உண்டாயின என்பதனை அடியார்க்கு நல்லார்,
“வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓரேழ் தொடுத்த மண்டிலமாகும்” - சிலம் – ஆய்ச்சி:13.8
என்று குறிப்பிடுகின்றார்.
தமிழிசையின் இசைமரபு நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்டதும், நமது பண்பாட்டுச் சூழலில்
மிக வளர்ச்சியடைந்த கலை வெளிப்பாட்டு முறையும் ஆகும். சிலப்பதிகாரத்தில் செவ்வியல் இசை ‘மார்க்கம்’ என்றும்,
நாட்டார் இசை ‘தேசி’ என்றும் பிரித்து வரையறுக்கப்பட்டுள்ளன. சிலம்பில் இசை உன்னத நிலை எய்தி, பின் பல்வேறு
ஆட்சியின் மாற்றங்களால் தோல்வியுற்று போயினும், காரைக்கால் அம்மையாரின் பாடல்களும், மூவர் தேவார பண்முறைத் தொகுப்பும் தமிழிசையின் வளத்தினை காட்டுபவைகளாகவே இருந்து வருகின்றன.
சாரங்க தேவர் வடமொழியில் எழுதிய சங்கீத ரத்னாகரம், சிலம்பில் காணலாகும் இசை நுணுகங்களைச் சார்ந்ததாகவும், மேலும் தெளிவுபடுத்துவனவாகவும் அமைவதோடு, மேளகர்த்தா இராகங்களும் தமிழிசை மரபினை மேலும் ஊக்குவிப்பனவாகவே அமைந்துள்ளன.
கருநாடகயிசை தமிழியிசையே - சில ஆதாரங்கள்
·
The Adhara swara
in a scale is known as Kural - UGC/NET/PhD Entrance Examination (Music)
·
“இப்படி
ஆய்வு செய்து பார்க்கும் போது தமிழிசையே இப்போது
தென்னிந்திய இசை என்றும்
கர்நாடக சங்கீதம் என்றும்
வழங்கப்படுகிறது என்று தெளிவாகிறது. வட இந்திய இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை இந்தத் தமிழிசையின் ஒரு வளர்ச்சி நிலையே என்றும்
தெரிய வருகிறது.”
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்.
·
“சங்கீ தத்தையும் தமிழன் கைவிடான்
சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு
யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,
ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
'கர்நா டகத்துச் சங்கீதம்' என்றே
அழைக்கப் படுகிற அந்தக் கலையும்
தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?”
சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு
யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,
ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
'கர்நா டகத்துச் சங்கீதம்' என்றே
அழைக்கப் படுகிற அந்தக் கலையும்
தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?”
- தமிழிசையின் தத்துவம்- தமிழ் இசை – நாமக்கல் கவிஞர்
·
“கருநாடக இசை வேறு மண்ணிலிருந்து வந்தது என்றால், அதன் பிறந்த மண்(இடம்) ஏது? ‘கருநாடகம்’ என்ற தொன்மையான தமிழகமே (தென் இந்தியா) அதன் பிறப்பிடம். ‘தொன்மையான இசை’ என்ற பொருளில் ‘கருநாடக இசை’ என்ற சொல்லாட்சி உருவாகியுள்ளது. ஆயினும்
பண்டைய அரங்கிசை (வேத்தியல், வேத்திசை) வடிவமே இன்றைய
கருநாடக இசையாகியுள்ளது. தமிழிசையின் ஒட்டுமொத்த வடிவம் மட்டுமே கருநாடக
இசையாகாது.
ஏனைய பலபிரிவுகளும் நம் இசைக்கு உண்டு. ”
-
தமிழறிஞர் நா.மம்மது – ஆ.ஷைலா ஹெலின்
19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட
மாபெரும் தமிழிசை எனும் கருநாடக இசையின் மறுமலர்ச்சியோடு காலந்தோறும் புதிய புதிய வடிவங்களை அடைந்தபடியே மாபெரும் பண்பாட்டு தமிழ் மரபு அழியாது தொடர்ந்து பயணித்து வருகிறது. மேற்கூறிய சில ஆதாரங்கள் மட்டுமல்லாது அனேக ஆதாரங்கள் மூலமாக கருநாடக இசை தமிழிசையே என்பது நிருபிக்கலாம்.
துணைநின்றவைகள்
1.கருணாமிர்த சாகரம் – இராவ் சாகெப் மு.ஆபிரகாம் பண்டிதர்
2. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்
3. தமிழிசைக் கலைக் களஞ்சியம் – வீ.ப.க. சுந்தரம்
4.. தமிழிசைப் பேரகராதி - நா. மம்மது
5. தமிழ் இசை – நாமக்கல் கவிஞர்
6. தமிழறிஞர் நா.மம்மது – ஆ.ஷைலா ஹெலின்
8. UGC/NET/Ph.D Entrance Examination (Music) – Dr.S.Bhagyalekshmi